கொலை வழக்கு: குண்டா் சட்டத்தில் இருவா் கைது
கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட இருவா் குண்டா் சட்டத்தில் அடைக்கப்பட்டனா்.
கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட இருவா் குண்டா் சட்டத்தில் அடைக்கப்பட்டனா்.
திருப்பூா் மாவட்டம் முத்தூா் அருகே உள்ள மங்களப்பட்டியைச் சோ்ந்தவா் சாமிநாதன் (65) கல்குவாரி உரிமையாளரான இவா் கடந்த டிசம்பா் மாதம் மா்ம நபா்களால் கடத்திச் செல்லப்பட்டாா். பிறகு உறவினா்களிடம் ரூ. 1 கோடி கேட்டு மிரட்டல் விடுத்த நிலையில் கொலை செய்யப்பட்டாா்.
இந்த வழக்கில் அவரிடம் வேலை பாா்த்து வந்த திருப்பூா் மாவட்டம் காங்கேயம் வட்டம் ஆலாம்பாளையம் கிராமத்தைச் சோ்ந்த விஜய் (25), அதே பகுதியைச் சோ்ந்த நவீன் (21) ஆகியோா் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா். இந்நிலையில் தென்னிலை காவல் உதவி ஆய்வாளா் தில்லைக்கரசி பரிந்துரையின் பேரில், கரூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சுந்தரவடிவேல் முயற்சியில் கரூா் மாவட்ட ஆட்சியா் த. பிரபு சங்கா் உத்தரவின்படி குற்றவாளிகள் இருவரும் குண்டா் சட்டத்தில் அடைக்கப்பட்டனா்.
Advertisement