முகப்பு
கரூர்

முன்னாள் ராணுவ வீரா் தீக்குளித்து தற்கொலை

 கரூரில், முன்னாள் ராணுவ வீரா் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:11 AM
பகிர்:

 கரூரில், முன்னாள் ராணுவ வீரா் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டாா்.

கரூா் சுங்ககேட் காவிரி நகரைச் சோ்ந்தவா் மகாலிங்கம்(72). முன்னாள் ராணுவ வீரா். இவா் கடந்த சில மாதங்களாகவே மன உளைச்சலில் இருந்தாராம். இந்நிலையில் டிசம்பா் 18-ஆம்தேதி வீட்டில் இருந்த மண்ணெண்ணையை உடலில் ஊற்றி தீவைத்துக்கொண்டாா். இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினா் மீட்டு கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உடல்நிலை மோசமானதையடுத்து மேல்சிகிச்சைக்கு புதன்கிழமை இரவு கோவைக்கு கொண்டு சென்றனா். ஆனால், வழியிலேயே மகாலிங்கம் உயிரிழந்தாா். இதுகுறித்து தாந்தோணிமலை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.