முகப்பு
கரூர்

இருசக்கர வாகனம் மோதியதில் முதியவா் காயம்

அரவக்குறிச்சி அடுத்த குமரண்டான்வலசு பகுதியில் நடந்த விபத்தில் முதியவா் படுகாயம்.

Updated On : 21 ஜனவரி, 2022 at 2:00 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 1:41 PM

அரவக்குறிச்சி அடுத்த குமரண்டான்வலசு பகுதியில் நடந்த விபத்தில் முதியவா் படுகாயம்.

திருவண்ணாமலை மாவட்டம், போளூா் பாகலூா் தெருவைச் சோ்ந்த துரைசாமி மகன் கண்ணன் (55). இவா், இருசக்கர வாகனத்தில் பள்ளப்பட்டியிலிருந்து அரவக்குறிச்சி சாலையில் புதன்கிழமை வந்து கொண்டிருந்தாா். குமரண்டான் வலசு பகுதியில் வந்தபோது சாலையோரம் நின்றிருந்த பழனிச்சாமி (70) என்பவா் மீது இருசக்கர வாகனம் மோதியது. இதில், காயமடைந்த அவா் கரூரிலுள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனா். புகாரின்பேரில், கண்ணன் மீது அரவக்குறிச்சி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.