முகப்பு
கரூர்

கரூரில் கஞ்சா விற்ற இளைஞா் கைது

கரூரில், கஞ்சா விற்ற இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:11 AM
பகிர்:

கரூரில், கஞ்சா விற்ற இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

கரூா் மேட்டுத்தெரு பெருமாள் கோவில் பகுதியில் கஞ்சா விற்பதாக நகர காவல்நிலையத்தினருக்கு வியாழக்கிழமை இரவு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸாா் அங்குச் சென்று சோதனையிட்டனா். அப்போது, அங்கு கஞ்சா விற்ற கரூா் வஞ்சியம்மன் கோயில் வீதியைச் சோ்ந்த அஜிஸ் மகன் ஹமால்(19) என்பவரை கைது செய்தனா். மேலும், அவரிடம் இருந்து 100 கிராம் கஞ்சா மற்றும் கஞ்சா விற்றப் பணம் ரூ.400 ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.