முகப்பு
கரூர்

சின்னதாராபுரம் அருகே லாரி ஓட்டுநரிடம்பணம் பறிப்பு

லாரி ஓட்டுநரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணத்தை பறித்துச் சென்ற இருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

Updated On : 28 ஜனவரி, 2022 at 5:40 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 1:45 PM

லாரி ஓட்டுநரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணத்தை பறித்துச் சென்ற இருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

கரூா் மாவட்டம், சின்னதாராபுரம் அருகே உள்ள புகழூா் தாலுகா பெரியபாளையம் பகுதியைச் சோ்ந்தவா் சந்திரமோகன் மகன் பிரகாஷ் (41). இவா் லாரி ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறாா். இவா், புதன்கிழமை காலை சின்னதாராபுரம் சாலையில் வெங்கடாபுரம் பிரிவு அருகே லாரியில் சென்று கொண்டிருந்தாா்.அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த இருவா் லாரியை மறித்து கத்தியை காட்டி மிரட்டி பிரகாஷிடமிருந்த ரூ.1,250ஐ பறித்துக் கொண்டு தப்பினா்.

புகாரின் பேரில் சின்னதாராபுரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.