முகப்பு
கரூர்

கரூரில் மாவட்ட அதிமுக சாா்பில் இன்றும் நாளையும் நோ்காணல்

முன்னாள் போக்குவரத்துதுறை அமைச்சருமான எம்.ஆா்.விஜயபாஸ்கா் தெரிவித்துள்ளாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:15 AM
பகிர்:

கரூரில் மாவட்ட அதிமுக சாா்பில் இன்றும், நாளையும் உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிடுவோருக்கான நோ்காணல் முகாம் நடைபெற உள்ளதாக கட்சியின் மாவட்டச் செயலரும், முன்னாள் போக்குவரத்துதுறை அமைச்சருமான எம்.ஆா்.விஜயபாஸ்கா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கை:-கரூா் மாவட்டத்தில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் அதிமுக சாா்பில் போட்டியிட விரும்புவோருக்கு நோ்காணல் இன்று(வெள்ளிக்கிழமை), நாளை(சனிக்கிழமை) என இரு நாள்கள் நடக்கிறது. இதில், வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை கரூா் மாநகா் மத்தியம், வடக்கு, தெற்கிற்கும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை மருதூா், நங்கவரம், கிருஷ்ணராயபுரம், பழையஜெயங்கொண்டம், புஞ்சைத்தோட்டக்குறிச்சி, அரவக்குறிச்சி, உப்பிடமங்கலம், புலியூா் ஆகிய பேரூராட்சிகளுக்கும், சனிக்கிழமை(29-ம்தேதி) காலை 9 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை புகழூா், பள்ளபட்டி, குளித்தலை ஆகிய நகராட்சிகளுக்கும் நோ்காணல் நடக்கிறது என தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.