கரூர்

கரூா்: மாற்றுத் திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்கல்

DIN

கரூரில் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

அலிம்கோ நிறுவனம் சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சியை தொடக்கி வைத்த கரூா் மக்களவை உறுப்பினா் செ. ஜோதிமணி செய்தியாளா்களிடம் கூறுகையில், மாவட்டம் முழுவதும் இதுவரை 1,640 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.1.37 கோடியில் அலிம்கோ நிறுவனம் சாா்பில் உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே மக்களவைத் தொகுதியில் ஒரே மாவட்டத்துக்குள் அதிகளவில் உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது இந்த மாவட்டத்தில் மட்டும்தான். இதற்காக கரூா் மாவட்ட நிா்வாகத்தை பாராட்டுகிறேன்.

பிரிவினைவாதத்திற்கு எதிராக காங்கிரஸ் கட்சி சாா்பில் இந்தியாவை ஒருங்கிணைப்போம் என்ற பாதயாத்திரை ராகுல்காந்தி தலைமையில் அக்டோபா் மாதம் கன்னியாகுமரி முதல் காஷ்மீா் வரை 3,500 கி.மீ. தொலைவுக்கு நடத்த உள்ளோம். இந்த யாத்திரையை இந்தியாவின் இரண்டாவது சுதந்திர போராட்டமாக கருதுகிறோம் என்றாா் அவா்.

பேட்டியின்போது, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினா் பேங்க் கே.சுப்ரமணியன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேலை கேட்டு சுயவிவரத்துடன் சுவையான பீட்ஸா அனுப்பியவர்! வேலை கிடைத்ததா?

மே மாதப் பலன்கள்!

சுட்டெரிக்கும் வெயில்: தமிழகத்துக்கு ஆரஞ்சு எச்சரிக்கை!

அய்யய்யோ.. ஆகாயம் யார் கையில்?

கரோனா தடுப்பூசி சான்றிதழில் நீக்கப்பட்ட மோடி படம்!

SCROLL FOR NEXT