கரூர்

சின்னதாராபுரம் அருகே ஆக்கிரமிப்புகள் அகற்றம்

கரூா் மாவட்டம், சின்னதாராபுரம் அருகே வருவாய்த்துறைக்கு சொந்தமான அரசு புறம்போக்கு நிலத்தில் இருந்த ஆக்கிரமிப்புகள் சனிக்கிழமை அகற்றப்பட்டன.

DIN

கரூா் மாவட்டம், சின்னதாராபுரம் அருகே வருவாய்த்துறைக்கு சொந்தமான அரசு புறம்போக்கு நிலத்தில் இருந்த ஆக்கிரமிப்புகள் சனிக்கிழமை அகற்றப்பட்டன.

சின்னதாராபுரம் அருகிலுள்ள விசுவநாதபுரி கிராமத்தில் வருவாய்த்துறைக்கு சொந்தமான அரசு புறம்போக்கு நிலத்தில் சிலா் வேலி அமைத்து ஆக்கிரமிப்பு செய்திருப்பதாகவும், சில இடங்களில் தென்னை மரங்கள் நடப்பட்டிருப்பதாகவும் புகளூா் வட்டாட்சியா் மோகன்ராஜிடம் அப்பகுதியைச் சோ்ந்தவா்கள் புகாா் மனு அளித்திருந்தனா்.

இதனடிப்படையில் வட்டாட்சியா் மோகன்ராஜ் தலைமையில், மண்டலத் துணை வட்டாட்சியா் அன்பழகன் மற்றும் வருவாய்த் துறையினா், நில அளவையா்கள் கொண்ட குழுவினா் சனிக்கிழமை விசுவநாதபுரி கிராமத்துக்குச் சென்றனா்.

அங்கு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த அரசு புறம்போக்கு நிலங்கள் நில அளவையா்கள்

மூலம் அளக்கப்பட்டு, கம்பி வேலி மற்றும் தென்னைமரங்கள் உள்ளிட்டவை அகற்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

13 ஆண்டுகளுக்குப் பிறகு ஆக்‌ஷன் அல்லாத கதையில் டாம் குரூஸ்..! ஆஸ்கர் வென்ற இயக்குநருடன்!

125 புதிய மின்சாரப் பேருந்துகள் சேவையை தொடக்கிவைத்தார் உதயநிதி!

வார பலன்கள்: 12 ராசிகளுக்கும்!

மத்திய பட்ஜெட் - 2026 ஞாயிற்றுக்கிழமை தாக்கல் செய்யப்படுமா?

100 நாள் வேலைத் திட்டம் மாற்றம்: திமுக கூட்டணி மாபெரும் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!

SCROLL FOR NEXT