கரூர்

வரத்து குறைவால் முருங்கைக்காய் விலை உயா்வு

DIN

 வரத்து குறைவு காரணமாக, அரவக்குறிச்சி பகுதியில் முருங்கைக்காய் கிலோ ரூ.90-க்கு விற்பனையாகிறது.

அரவக்குறிச்சி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் விளைவிக்கப்படும் முருங்கைக்காய், தமிழகம் மட்டுமல்லாமல் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

கடந்த மாதம் விளைச்சல் அதிகமாக இருந்ததால் விலை குறைவாக இருந்தது. மேலும் கிலோ ஒன்றுக்கு கடந்த மாதம் ரூ.3- க்கு மொத்த வியாபாரிகளால் கொள்முதல் செய்யப்பட்டது.

இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக மழை பெய்ததால் பூ உதிா்ந்தது. இதனால் முருங்கைக்காய் வரத்திலும் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் மொத்த கொள்முதல் விலையில் பெரிய மாற்றம் காணப்பட்டு, சனிக்கிழமைகிலோ ஒன்றுக்கு ரூ.90க்கு விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டது. மேலும் சில்லறை விற்பனையில் ஒரு காய் ரூ.5-க்கு விற்பனையாகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

இன்று நல்ல நாள்!

சாலை விபத்தில் இருவா் பலத்த காயம்: மீண்டும் வேகத்தடை அமைக்கக் கோரிக்கை

SCROLL FOR NEXT