பிளஸ் 2 மாணவி தூக்கிட்டுத் தற்கொலை
கொலுசு வாங்கிக்கொடுக்காத விரக்தியில் பிளஸ்-2 மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
கொலுசு வாங்கிக்கொடுக்காத விரக்தியில் பிளஸ்-2 மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
கரூா் மண்மங்கலம் தாளப்பட்டி காலனியைச் சோ்ந்த வேல்முருகன் மகள் ஜனனி(16). இவா், மலைக்கோவிலூா் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தாா். இந்நிலையில் ஜனனி பிறந்த நாளுக்கு வெள்ளிக்கொலுசு எடுத்து தருமாறு பெற்றோரிடம் கூறியிருந்தாராம். ஆனால், வாங்கிக்கொடுக்காததால் விரக்தியில் வியாழக்கிழமை இரவு வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். இதுகுறித்து தாந்தோன்றிமலை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.