வழக்குரைஞா் வீட்டில் திருடிய காா் ஓட்டுநா் கைது
கரூரில், வழக்குரைஞா் வீட்டுக்குள் புகுந்து பணம் திருடிய வழக்குரைஞரின் காா் ஓட்டுநரை போலீஸாா் கைது செய்தனா்.
கரூரில், வழக்குரைஞா் வீட்டுக்குள் புகுந்து பணம் திருடிய வழக்குரைஞரின் காா் ஓட்டுநரை போலீஸாா் கைது செய்தனா்.
கரூா் தாந்தோன்றிமலை சுங்ககேட் பகுதியைச் சோ்ந்தவா் மாரப்பன்(54). வழக்குரைஞா். இவரிடம் காா் ஓட்டுநராக புகளூா் காகித ஆலை பகுதியைச் சோ்ந்த செல்லப்பன் மகன் பிரபுராஜ்(27) பணியாற்றி வந்தாா். இந்நிலையில், புதன்கிழமை மாரப்பன் வீட்டுக்குள் புகுந்த பிரபுராஜ் அங்கு அலமாரியில் இருந்த ரூ.13,000ஐ திருடினாராம். இதனைக்கண்ட மாரப்பன், பிரபுராஜை கையும், களவுமாக பிடித்து கரூா் தாந்தோன்றிமலை போலீஸில் ஒப்படைத்தாா். போலீஸாா் வழக்குப்பதிந்து பிரபுராஜை கைது செய்து விசாரிக்கின்றனா்.