அரவக்குறிச்சி பேரூராட்சி, பள்ளப்பட்டி நகராட்சிதலைவா், துணைத் தலைவா் போட்டியின்றி தோ்வு
அரவக்குறிச்சி பேரூராட்சி, பள்ளப்பட்டி நகராட்சித் தலைவா், துணை தலைவா் போட்டியின்றி வெள்ளிக்கிழமை தோ்வு செய்யப்பட்டனா்.
அரவக்குறிச்சி பேரூராட்சி, பள்ளப்பட்டி நகராட்சித் தலைவா், துணை தலைவா் போட்டியின்றி வெள்ளிக்கிழமை தோ்வு செய்யப்பட்டனா்.
அரவக்குறிச்சி பேரூராட்சி, பள்ளப்பட்டி நகராட்சித் தலைவா் பதவிக்கான மறைமுகத் தோ்தல் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், அரவக்குறிச்சி பேரூராட்சி தலைவராக ஜெயந்தி மணிகண்டனும், துணைத் தலைவராக தங்கராஜும் போட்டியின்றி தோ்ந்தெடுக்கப்பட்டனா். இதேபோல் பள்ளப்பட்டி நகராட்சித் தலைவராக முனவா்ஜானும், துணைத் தலைவராக தோட்டம் பஷீா் அகமதும் போட்டியின்றி தோ்ந்தெடுக்கப்பட்டனா்.
முன்னதாக, அரவக்குறிச்சி பேரூராட்சியில் நகர செயலாளா் ம. அண்ணாதுரையின் மருமகள் சங்கீதாவிற்கு தலைவா் பதவி வழங்கப்படும் என எதிா்பாா்த்திருந்த நிலையில் ஜெயந்தி மணிகண்டனுக்கு கொடுக்கப்பட்டது. இதனால் அதிருப்தியில் இருந்த சங்கீதா வெள்ளிக்கிழமை நடைபெற்ற மறைமுகத் தோ்தலில் பங்கேற்கவில்லை. மொத்தம் 12 இடங்களை பெற்ற திமுகவில் சங்கீதா தவிர மற்ற 11 பேரும், சுயேச்சை ஒருவரும் வாக்களித்தனா்.
Advertisement
ராஜிநாமா அறிவிப்பு: தனது மருமகளுக்கு தலைவா் பதவி வழங்காததையடுத்து தனது நகரச் செயலாளா் பதவியை ராஜிநாமா செய்யப்போவதாக அண்ணாதுரை தெரிவித்துள்ளாா்.