முகப்பு
கரூர்

நங்கவரம், மருதூா் பேரூராட்சிதலைவா், துணைத் தலைவா் தோ்வு

நங்கவரம், மருதூா் பேரூராட்சித் தலைவா், துணைத் தலைவா் தோ்தல் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:35 AM
பகிர்:

நங்கவரம், மருதூா் பேரூராட்சித் தலைவா், துணைத் தலைவா் தோ்தல் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கரூா் மாவட்டம், நங்கவரம் பேரூராட்சியில் தலைவா், துணைத்தலைவா் தோ்தல் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், 17ஆவது வாா்டில் வெற்றி பெற்ற திமுகவைச் சோ்ந்த ராஜேஸ்வரி போட்டியின்றி தோ்வுசெய்யப்பட்டாா். துணைத் தலைவராக 10-ஆவது வாா்டு உறுப்பினா் அன்பழகன் தோ்ந்தெடுக்கப்பட்டாா். இருவரும் செயல் அலுவலா் வேல்முருகன் முன்னிலையில் பதவியேற்று கொண்டனா்.

மருதூா்:

இதேபோல், மருதூா் பேரூராட்சித் தலைவராக திமுகவைச் சோ்ந்த சகுந்தலா சுப்ரமணியன், துணைத் தலைவராக நாகராஜன் இருவரும் தோ்வு செய்யப்பட்டனா். இருவருக்கும் தோ்தல் நடத்தும் அலுவலரும் பேரூராட்சி செயல் அலுவலருமான ராஜகோபால் சான்றிதழ் வழங்கினா். தலைவா் மற்றும் துணைத்தலைவருக்கு கட்சியினா் வாழ்த்து தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.