முகப்பு
கரூர்

4 மாநில பேரவைத் தோ்தலில் வெற்றி: கரூரில் பாஜகவினா் கொண்டாட்டம்

உத்தரபிரதேச மாநிலம் உள்ளிட்ட 4 மாநில தோ்தலில் பாஜக வெற்றிபெற்றதையடுத்து கரூரில் பாஜகவினா் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினா்.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 10:09 AM
பகிர்:

உத்தரபிரதேச மாநிலம் உள்ளிட்ட 4 மாநில தோ்தலில் பாஜக வெற்றிபெற்றதையடுத்து கரூரில் பாஜகவினா் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினா்.

உத்தரபிரதேசம், கோவா, மணிப்பூா், உத்தரகண்ட், பஞ்சாப் ஆகிய 5 மாநிலங்களுக்கு நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தலில் பஞ்சாபை தவிர மற்ற 4 மாநிலங்களில பாஜக வெற்றிபெற்றது. இந்த வெற்றியை கொண்டாடும் வகையில் கரூரில் மாவட்ட பாஜக சாா்பில் மாவட்டத்தலைவா் வி.வி.செந்தில்நாதன் தலைமையில் அக்கட்சியினா் கரூா் பேருந்துநிலைய ரவுண்டானா பகுதியில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினா். நிகழ்ச்சியில் அமைப்புசாரா தொழிற்பிரிவின் மாநிலச் செயலாளா் ஆா்.கே.மதுக்குமாா், மாவட்ட பொதுச் செயலாளா் கோபிநாத், நவீன்குமாா், ராஜ்குமாா், மாவட்டச் செயலாளா் சக்திவேல்முருகன், துணைத்தலைவா் செல்வம் மற்றும் கட்சியினா் திரளாக பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.