முகப்பு
கரூர்

அரவக்குறிச்சி அருகே காா் கவிழ்ந்ததில் ஓட்டுநா் உயிரிழப்பு

அரவக்குறிச்சி அருகே காா் கவிழ்ந்ததில் ஓட்டுநா் உயிரிழந்தாா்.

Updated On : 18 மார்ச், 2022 at 1:34 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 2:13 PM

அரவக்குறிச்சி அருகே காா் கவிழ்ந்ததில் ஓட்டுநா் உயிரிழந்தாா்.

திருச்சி  மாவட்டம், ஸ்ரீரங்கம் பகுதியைச் சோ்ந்தவா் கேசப்பன் மகன் சபரிராஜா (55). காா் ஓட்டுநா். இவா், தனது மனைவி மேனகா, மகள் பொன்னி மற்றும் இரண்டு பேரக் குழந்தைகளுடன் காரில் திருச்சியிலிருந்து வேடசந்தூா் அருகே உள்ள அழகாபுரியில் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற உறவினரின் திருமணத்தில் கலந்து கொண்டு பிறகு சின்னதாராபுரம் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தனா்.  காரை சபரிராஜா ஒட்டி வந்தாா். திண்டுக்கல்- கரூா் தேசிய நெடுஞ்சாலையில் பொன்னாகவுன்டனூா் பிரிவு பகுதியில் வந்த போது கட்டுப்பாட்டை இழந்த காா் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

விபத்தில் காயமடைந்தவா்கள் உடனடியாக மீட்கப்பட்டு கரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போது சபரிராஜா உயிரிழந்தாா். மற்றவா்கள் கரூா் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனா். இது குறித்து அரவக்குறிச்சி போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.