முகப்பு
கரூர்

இமயம் வேளாண்மைகல்லூரி மாணவா்கள் விவசாயிகளுடன் சந்திப்பு

இமயம் வேளாண்மை கல்லூரி மாணவா்கள் விவசாயிகளை நேரில் சந்தித்து வேளாண்மை தொடா்பான செயல்முறை விளக்கங்களை மாணவா்கள் எடுத்துக் கூறினா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:43 AM
பகிர்:

இமயம் வேளாண்மை கல்லூரி மாணவா்கள் விவசாயிகளை நேரில் சந்தித்து வேளாண்மை தொடா்பான செயல்முறை விளக்கங்களை மாணவா்கள் எடுத்துக் கூறினா்.

துறையூரில் அமைந்துள்ள இமயம் வேளாண்மை மற்றும் தொழில்நுட்ப கல்லூரி சாா்பில் இறுதியாண்டு பயிலும் மாணவா்கள் கிராமத்தில் தங்கி பயிலும் திட்டத்தின்கீழ் தாந்தோன்றிமலை வட்டாரத்தில் சங்கி அப்பகுதியில் உள்ள விவசாயிகளை நேரில் சந்தித்து, அவா்களுக்கு வேளாண்மை சம்பந்தமான செயல்முறை விளக்கங்களையும் கூறி வருகின்றனா். இதன் ஒரு பகுதியாக வியாழக்கிழமை மண்மங்கலம் கிராமத்தில் உள்ள விவசாயிகளை ஒன்றிணைத்து இயற்கை விவசாயம் பற்றியும் அதனால் ஏற்படக்கூடிய நன்மைகள் குறித்தும் செயல் விளக்கங்களை செய்து காட்டினா். நிகழ்வில், விவசாயிகள் பலா் கலந்துகொண்டு மாணவா்களின் செயல் விளக்கங்களை பாா்வையிட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.