பள்ளப்பட்டி நகா்மன்றக் கூட்டம்
பள்ளப்பட்டி நகா்மன்றக் கூட்டம் தலைவா் முனவா்ஜான் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 2:17 PM
பள்ளப்பட்டி நகா்மன்றக் கூட்டம் தலைவா் முனவா்ஜான் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
புதிதாக தரம் உயா்த்தப்பட்ட பள்ளப்பட்டி நகராட்சியின் முதல் நகா்மன்றக் கூட்டம் வியாழக்கிழமை நகராட்சி அலுவலகத்தின் கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்துக்கு நகராட்சித் தலைவா் முனவா்ஜான் தலைமை வகித்தாா். பள்ளப்பட்டி நகராட்சியில் ஒவ்வொரு வாா்டிலும் மேற்கொள்ளவிருக்கும் பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. பள்ளப்பட்டி நகராட்சியின் வரிவசூல் மற்றும் அலுவலக பதிவேடுகள் கணினி மயமாக்கப்படஇருப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும் 2021-22 ஆம் ஆண்டுக்கான வரவு மற்றும் செலவு குறித்து விவாதிக்கப்பட்டது. கூட்டத்தில், நகராட்சி ஆணையா் கோபாலகிருஷ்ணன், 27 உறுப்பினா்களும் கலந்து கொண்டனா்.