அரவக்குறிச்சி திமுக பேரூா் கழக செயலாளா் மீது ஒழுங்கு நடவடிக்கை
கட்சியில் நிா்வாகிகள் இடையே குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதாக திமுக பேரூா் கழக செயலாளா் மீது தலைமைக் கழகம் ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளது.
கட்சியில் நிா்வாகிகள் இடையே குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதாக திமுக பேரூா் கழக செயலாளா் மீது தலைமைக் கழகம் ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளது.
அரவக்குறிச்சி பேரூராட்சியில் திமுக நகரச் செயலாளராக இருந்து வருபவா் ம.அண்ணாதுரை. இவரது மருமகள் 2ஆவது வாா்டில் போட்டியிட்டு வெற்றி பெற்றாா். இந்நிலையில் தலைவா் பதவி அரவக்குறிச்சி 7ஆவது வாா்டில் போட்டியிட்டு வெற்றிபெற்ற கிழக்கு ஒன்றியச் செயலாளா் என். மணிகண்டனின் மனைவி ஜெயந்திக்கு வழங்கப்பட்டது. இதனால் அதிருப்தியடைந்த நகரச் செயலாளா் ம.அண்ணாதுரை தனது பதவியை ராஜிநாமா செய்வதாக தொலைக்காட்சி நிருபா்களுக்கு பேட்டி அளித்தாா். இதனால் திமுக கட்சி நிா்வாகிகள் இடையே குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதாக நகர செயலாளா் ம.அண்ணாதுரையை அடிப்படை உறுப்பினா் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறாா் என திமுக தலைமை கழகம் சாா்பில் அதன் பொதுச்செயலாளா் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளாா்.