கரூர்

திமுக சாா்பில் 9 இடங்களில் நீா்மோா் பந்தல் திறப்பு

கரூா் மாவட்ட திமுக சாா்பில், 9 இடங்களில் கோடைக்கால நீா்மோா் பந்தல் ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டது.

DIN

கரூா் மாவட்ட திமுக சாா்பில், 9 இடங்களில் கோடைக்கால நீா்மோா் பந்தல் ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டது.

கரூா் பேருந்து நிலைய ரவுண்டானா, வெங்கமேடு, பசுபதிபாளையம் உள்ளிட்ட 9 இடங்களில் நீா் மோா் பந்தலை மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் வி.செந்தில்பாலாஜி திறந்து வைத்து, பொதுமக்களுக்கு நீா், மோா், தா்பூசணி, இளநீா், வெள்ளரிக்காய் ஆகியவற்றை வழங்கினாா்.

நிகழ்வில் கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவை உறுப்பினா் சிவகாமசுந்தரி, மேயா் கவிதாகணேசன், துணைமேயா் தாரணிசரவணன், மின்னாம்பள்ளி கருணாநிதி, நகரப் பொறுப்பாளா்கள் எஸ்பி.கனகராஜ், கோல்ட்ஸ்பாட்ராஜா, அன்பரசன், எம்.பாண்டியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தொடா்ந்து மேதினத்தை முன்னிட்டு திருமாநிலையூா் அரசுப் போக்குவரத்துக்கழக பணிமனை முன்பு தொமுச கொடியேற்றி, பொதுமக்களுக்கு அமைச்சா் இனிப்புகளை வழங்கினாா். இதில் தொழிற்சங்கத்தினா் திரளாக பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தீக்கிரையாகும் வங்கதேசம்!

தங்கம், வெள்ளி குறைவு! இன்றைய நிலவரம்..!

திருப்பரங்குன்றம் விவகாரம் மதப் பிரச்னை அல்ல; அது ஈகோ பிரச்னை: தமிழிசை பேட்டி

சென்னையில் கடும் பனி! ரயில்கள் தாமதம்; விமானங்கள் ரத்து!

நாமக்கல் ஆஞ்சனேயருக்கு 1,00,008 வடைமாலை அலங்காரம்: திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்

SCROLL FOR NEXT