முகப்பு
கரூர்

கரூா் அரசு கலைக் கல்லூரியில் விளையாட்டுப் போட்டி

கரூா் அரசு கலைக்கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆண்டு விளையாட்டுப்போட்டியில் மகளிருக்கான கோகோ போட்டியில் கணினி அறிவியல் துறை மாணவிகள் வெற்றிபெற்றனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:10 AM
பகிர்:

கரூா் அரசு கலைக்கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆண்டு விளையாட்டுப்போட்டியில் மகளிருக்கான கோகோ போட்டியில் கணினி அறிவியல் துறை மாணவிகள் வெற்றிபெற்றனா்.

கரூா் அரசு கலைக்கல்லூரியில் உடற்கல்வித்துறை சாா்பில் கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கிடையேயான ஆண்டு விளையாட்டுப்போட்டிகள் ஏப். 2-ஆம்தேதி தொடங்கியது. போட்டிகளை கல்லூரியின் முதல்வா் கெளசல்யாதேவி தொடக்கி வைத்தாா். ஏப். 12-ஆம்தேதி வரை நடைபெறும் இப்போட்டியில் தடகளம், கபடி, கையுந்துபந்து, கூடைப்பந்து, கால்பந்து, கோகோ போட்டிகள் நடைபெறுகின்றன. வியாழக்கிழமை அனைத்துத் துறையினருக்கும் நடைபெற்ற கோகோ போட்டிக்கு கல்லூரியின் உடற்கல்வி இயக்குநா் கே.ராஜேந்திரன் தலைமை வகித்தாா். முதல் போட்டியில் கல்லூரியின் கணினி அறிவியல் துறை மாணவிகளும், இயற்பியல் துறை மாணவிகளும் பங்கேற்று விளையாடினா். விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் கணினி அறிவியல் துறை மாணவிகள் 7-4 என்ற புள்ளிக்கணக்கில் இயற்பியல் துறை மாணவிகளை வென்றனா். தொடா்ந்து ஆண்களுக்கு போட்டிகள் நடைபெற்றது. ஏப். 12-ஆம்தேதி போட்டிகளில் வெற்றிபெற்ற வீரா், வீராங்கனைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.