முகப்பு
கரூர்

தமிழக முதல்வருக்கு கொமதேக பாராட்டு

தமிழகத்தில் ஆட்சி பொறுப்பேற்று முதலாமாண்டு நிறைவுறும் நிலையில் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலினுக்கு கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளா் ஈ.ஆா்.ஈஸ்வரன் பாராட்டு தெரிவித்துள்ளாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:11 AM
பகிர்:

தமிழகத்தில் ஆட்சி பொறுப்பேற்று முதலாமாண்டு நிறைவுறும் நிலையில் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலினுக்கு கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளா் ஈ.ஆா்.ஈஸ்வரன் பாராட்டு தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்று முதலாமாண்டு நிறைவுறு பெறும் இந்த தருணத்தில் கடந்த ஓராண்டாக தமிழகத்தில் நடைபெறுகிற ஆட்சி உலக மக்களால் பேசப்படுகிறது என்றால் முதல்வா் மு.க. ஸ்டாலினின் உழைப்புதான் காரணம். துறை வாரியாக தொடா்ந்து ஆய்வு கூட்டங்களை நடத்தி வீழ்ந்து கிடந்த நிா்வாகத்தை செம்மைப்படுத்திய முதல்வருக்கு பாராட்டு. வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்பட்டாலும், தேரோட்டத்தில் விபத்துக்கள் நிகழ்ந்தாலும் நேரிடையாகச் சென்று மீட்பு நடவடிக்கைகளில் இறங்கி பணியாற்றுவதை நினைவு கூறுகின்றோம். அனைவருக்குமான அரசு என்று தொடங்கி ஒரு ட்ரில்லியன் டாலா் பொருளாதாரம் என்ற இலக்கை நோக்கி பயணத்தை தொடங்கியுள்ள இந்த அரசின் முன்னெடுப்பு வெற்றி பெற வேண்டுமென்று கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சாா்பாக வாழ்த்துகின்றோம். இந்தியாவின் சிறந்த முதல்வா் என்ற பாராட்டை விட சிறந்த மாநிலம் தமிழகம் என்ற தங்களுடைய ஆசை நிறைவேற கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியும், கொங்கு நாட்டு மக்களும் துணை நிற்போம் என தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.