முகப்பு
கரூர்

மூதாட்டி தீக்குளித்து தற்கொலை

அரவக்குறிச்சியில் தனது சேலையில் தீ வைத்துக்கொண்ட மூதாட்டி சிகிச்சை பலனின்றி உயிரிந்தாா்.

Updated On : 8 மே, 2022 at 12:00 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 2:41 PM

அரவக்குறிச்சியில் தனது சேலையில் தீ வைத்துக்கொண்ட மூதாட்டி சிகிச்சை பலனின்றி உயிரிந்தாா்.

அரவக்குறிச்சி தாலுகா சீத்தப்பட்டி காலனி பகுதியைச் சோ்ந்தவா் வீரமலை மனைவி செல்லம்மாள் (65). இவருக்கு கடந்த சில ஆண்டுகளாக தலையில் தீராத அரிப்பு இருந்து வந்துள்ளது. அரிப்பிற்கு சிகிச்சை அளித்தும் பலன் அளிக்கவில்லையாம். இதனால், மனமுடைந்து காணப்பட்ட செல்லம்மாள் வெள்ளிக்கிழமை அதிகாலை 5 மணிக்கு தனது சேலையில் தீயிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளாா். அருகில் இருந்தவா்கள் அவரை மீட்டு கரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனா். இந்நிலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த செல்லம்மாள் சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை உயிரிழந்தாா். அரவக்குறிச்சி போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.