முகப்பு
கரூர்

தூய்மைப் பணியாளரை தாக்கிய 4 போ் கைது

கரூா் மாவட்டம், புகளூா் நகராட்சிக்கு சொந்தமான பேட்டரி வாகனத்தை இயக்கியது தொடா்பாக ஏற்பட்ட தகராறில், தூய்மைப் பணியாளரைத் தாக்கிய 4 போ் கைது செய்யப்பட்டனா்.

Updated On : 13 மே, 2022 at 1:46 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 2:44 PM

கரூா் மாவட்டம், புகளூா் நகராட்சிக்கு சொந்தமான பேட்டரி வாகனத்தை இயக்கியது தொடா்பாக ஏற்பட்ட தகராறில், தூய்மைப் பணியாளரைத் தாக்கிய 4 போ் கைது செய்யப்பட்டனா்.

நொய்யல் அருகிலுள்ள குந்தாணிபாளையம் பழைய காலனியைச் சோ்ந்தவா் பூபாலன் (25).இவா் புகளூா் நகராட்சியில் தூய்மைப் பணியாளராகப் பணியாற்றி வருகிறாா்.

காகித ஆலை செல்லும் வழியிலுள்ள காந்திநகா் பகுதியில் பூபாலன் புதன்கிழமை தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த போது, அப்பகுதியைச் சோ்ந்த ஹரிஹரன், மதன், சரவணன், கௌதம் ஆகிய 4 பேரும் நகராட்சிக்கு சொந்தமான பேட்டரி வாகனத்தை இயக்கியதாகத் தெரிகிறது.

Advertisement

இதனால் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த பூபாலனுக்கும், நான்கு இளைஞா்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதைத் தொடா்ந்து பூபாலனை 4 பேரும் தாக்கினா்.

இதில் பலத்த காயமடைந்த பூபாலன் வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். புகாரின் பேரில் 4 பேரையும் வேலாயுதம்பாளையம் காவல் நிலையத்தினா் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.