முகப்பு
கரூர்

லாரி மோதி மூதாட்டி பலி

 கரூரில் டாரஸ் லாரி மோதியதில் மூதாட்டி புதன்கிழமை இரவு உயிரிழந்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:18 AM
பகிர்:

 கரூரில் டாரஸ் லாரி மோதியதில் மூதாட்டி புதன்கிழமை இரவு உயிரிழந்தாா்.

கரூா் ரெங்கநாயகிபுரத்தைச் சோ்ந்தவா் கா. காளியம்மாள் (75). இவா் புதன்கிழமை இரவு கோவைச் சாலையில் மின்பொருளகம் எதிரில் சாலையைக் கடக்க முயன்றாா்.

அப்போது கரூா் பேருந்து நிலையம் நோக்கிச் சென்ற டாரஸ் லாரி, காளியம்மாள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவா் கரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்தாா்.

இதுகுறித்து கரூா் நகரக் காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து, விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.