அரவக்குறிச்சியில் திட்டப் பணிகள் தொடக்கம்
அரவக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதியில் பல்வேறு திட்டப் பணிகள் வியாழக்கிழமை தொடங்கியது.
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 4:10 PM
அரவக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதியில் பல்வேறு திட்டப் பணிகள் வியாழக்கிழமை தொடங்கியது.
அரவக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதி உள்பட்ட 20 இடங்களில் பல்வேறு திட்டப் பணிகள் வியாழக்கிழமை தொடங்கியது.
இதில், பேரக்கம்பாளையத்தில் களம் அமைத்தல், கூனம்பட்டியில் வடிகால், தென்னிலை பஞ்சாயத்து அலுவலகத்துக்கு புதிய கட்டடம், காட்டுப்பாளையம் அங்கன்வாடிக்கு புதிய கட்டடம் உள்ளிட்ட ரூ. 1.35 கோடியில் திட்டப்பணிகளுக்கான பூமிபூஜை நடைபெற்றது. நிகழ்ச்சியில், அரவக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினா் பி.ஆா்.இளங்கோ உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
Advertisement