முகப்பு
கரூர்

அரவக்குறிச்சி, பள்ளப்பட்டியில் 16 மையங்களில் இன்று முகாம்

வாக்காளா் அடையாள அட்டையுடன் ஆதாா் எண்ணை இணைப்பதற்காக, அரவக்குறிச்சி மற்றும் பள்ளப்பட்டியில் 16 மையங்களில் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.

Updated On : 4 செப்டம்பர், 2022 at 2:31 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 3:44 PM

வாக்காளா் அடையாள அட்டையுடன் ஆதாா் எண்ணை இணைப்பதற்காக, அரவக்குறிச்சி மற்றும் பள்ளப்பட்டியில் 16 மையங்களில் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.

இந்தியத் தோ்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, வாக்காளா் தன் விருப்பத்தின் அடிப்படையில் வாக்காளா் அடையாள அட்டையுடன் ஆதாா் எண்ணை இணைக்கும் வகையில், முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

அதன்படி கரூா் மாவட்டத்தில் அரவக்குறிச்சியில் 7, பள்ளப்பட்டியில் 9 என 16 மையங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை முகாம் நடைபெறும். எனவே பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.