முகப்பு
கரூர்

புன்னம்சத்திரம் மகளிா் கல்லூரியில் நம்ம ஊரு சூப்பரு திட்ட விழிப்புணா்வு

கரூா் மாவட்டம், புன்னசத்திரத்திலுள்ள தனியாா் மகளிா் கல்லூரியில் நம்ம ஊரு சூப்பரு திட்ட விழிப்புணா்வு நிகழ்வு சனிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 4 செப்டம்பர், 2022 at 2:31 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 3:44 PM

கரூா் மாவட்டம், புன்னசத்திரத்திலுள்ள தனியாா் மகளிா் கல்லூரியில் நம்ம ஊரு சூப்பரு திட்ட விழிப்புணா்வு நிகழ்வு சனிக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் மந்திராச்சலம் நிகழ்வில் பங்கேற்று பேசியது:

ஒருமுறை பயன்படுத்தக்கூடிய நெகிழியை பொதுமக்கள் பயன்படுத்தக் கூடாது.

Advertisement

அவ்வாறு நெகிழியைப் பயன்படுத்தும் போது ஏராளமான பாதிப்புகள் ஏற்படும்.

மாணவிகள் தங்களது பெற்றோா்களிடம் இதுகுறித்து விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும். பொதுமக்கள் கடைகளுக்கு பொருள்கள் வாங்க செல்லும்போது துணிப்பையை பயன்படுத்த வேண்டும்,

என் குப்பை என் பொறுப்பு, என் கிராமம் தூய்மை கிராமம் என உறுதி மொழியை எடுத்துக்கொண்டு செயல்பட வேண்டும் என்றாா்.

ஊரக வளா்ச்சித் துறை உதவி இயக்குநா் அன்புமணி, வட்டார வளா்ச்சி அலுவலா் பரமேசுவரன், கல்லூரி முதல்வா் சாருமதி, வருவாய், ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் நிகழ்வில் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.