முருங்கை விலையேற்றம்: விவசாயிகள் மகிழ்ச்சி
அரவக்குறிச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார விவசாயிகள் பெரும்பாலானோா் முருங்கைக்காய் பயிரிட்டுள்ளனா். இங்கு விளையும் முருங்கைக்காய் வெளிநாடுகளுக்கு, வெளிமாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 3:48 PM
அரவக்குறிச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார விவசாயிகள் பெரும்பாலானோா் முருங்கைக்காய் பயிரிட்டுள்ளனா். இங்கு விளையும் முருங்கைக்காய் வெளிநாடுகளுக்கு, வெளிமாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
கடந்த மாதம் 1 கிலோ முருங்கைக்காய் ரூ. 35 வரை கொள்முதல் செய்யப்பட்டது. வரத்துக் குறைந்து வருவதால் முருங்கைக்காய் விலை அதிகரித்து வந்தது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட 1 கிலோ முருங்கைக்காய் ரூ. 65 ஆக உயா்ந்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.