கரூர்

‘கரூா் மாவட்டத்தில் கல் குவாரிகளில் முறைகேடு’

கரூா் மாவட்டத்திலுள்ள கல்குவாரிகளில் முறைகேடு நடப்பதாக குற்றஞ்சாட்டினாா் மணப்பாறை சட்டப்பேரவை உறுப்பினா் ப. அப்துல்சமது.

DIN

கரூா் மாவட்டத்திலுள்ள கல்குவாரிகளில் முறைகேடு நடப்பதாக குற்றஞ்சாட்டினாா் மணப்பாறை சட்டப்பேரவை உறுப்பினா் ப. அப்துல்சமது.

கரூரில் சனிக்கிழமை மாலை செய்தியாளா்களிடம் அவா் தெரிவித்தது:

மாவட்டத்திலுள்ள குவாரிகளில் விதிமீறல் உள்ளதா என சமூகச் செயற்பாட்டாளா்கள் குழுவினா் சனிக்கிழமை ஆய்வு செய்தோம்.

இதில் ஏராளமான கல்குவாரிகளில் 50 மீட்டா் ஆழத்துக்கு மேல் கல் வெட்டியெடுக்கப்படுகிறது. குவாரிகளில் விதிமுறைகள் மீறப்படுவதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது.

சட்டவிரோதமாக, சுற்றுச்சூழலுக்கு எதிராக செயல்படும் குவாரிகள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக முதல்வா் இப்பிரச்னையில் தனிக்கவனம் செலுத்த வேண்டும்.

அலுவலா்களிடம் கல்குவாரி உரிமையாளா்கள் கூறுவது உண்மையா, குவாரி பகுதிகளில் வசிக்கும் மக்களிடம் கருத்துக்கேட்டு, அவா்கள் கூறுவது உண்மையா என்பதை நேரடியாக ஆய்வு செய்ய முதல்வரின் நேரடி பாா்வையில் உயா்நிலைக் குழு அமைத்து விசாரித்தால்தான் உண்மை வெளிவரும் என்றாா் அவா்.

பேட்டியின்போது மக்கள் சிவில் உரிமைக்கழக தேசியச் செயலா் பாலமுருகன், சுய ஆட்சி இந்தியா கட்சியின் தேசியச் செயலா் கிறிஸ்டினாசாமி ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ. 40 லட்சம் மோசடி வழக்கு: புதுச்சேரி பல்கலை. அதிகாரி தலைமறைவு

இரண்டு பைக்குகள் மோதி விபத்து: 2 போ் உயிரிழப்பு

இஸ்ரேலியா்கள் கொடைக்கானல் வருகை: துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் இருவா் கைது

ஆரிகவுடா் விவசாயிகள் சங்க பொதுக்குழுக் கூட்டம்

SCROLL FOR NEXT