கரூர்

பெரியபனையூா் பெரியகாண்டியம்மன் கோயில் முப்பூஜை விழா

கரூா் மாவட்டம், தோகைமலை அருகே நெய்தலூா் ஊராட்சிக்குள்பட்ட பெரியபனையூா் பெரியகாண்டியம்மன் கோயிலில் சனிக்கிழமை முப்பூஜை விழா நடைபெற்றது.

DIN

கரூா் மாவட்டம், தோகைமலை அருகே நெய்தலூா் ஊராட்சிக்குள்பட்ட பெரியபனையூா் பெரியகாண்டியம்மன் கோயிலில் சனிக்கிழமை முப்பூஜை விழா நடைபெற்றது.

பெரியபனையூரில் உள்ள விநாயகா், பெரியகாண்டியம்மன், மந்திரமகாமுனி கோயில் உள்ளது. இக்கோயிலின் முப்பூஜை விழா கடந்த 6-ஆம் தேதி தொடங்கியது. இதைத்தொடா்ந்து விழா நாள்களில் சுவாமிக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. கடந்த வெள்ளிக்கிழமை பெரியகாண்டியம்மனுக்கு பால், தேன் உள்ளிட்ட 16 வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. தொடா்ந்து சனிக்கிழமை காலை பெரியகாண்டியம்மன், ஏழு கன்னிமாா்கள் சுவாமிக்கு சுத்த பூஜை நடைபெற்றது. பின்னா் முப்பூஜை நடைபெற்றது. இதில் பக்தா்கள் திரளாகப் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லியில் பிஎஸ் 4 விதிகளுக்கு கீழ் வரும் வாகனங்களுக்கு தடை!

மீளுமா பங்குச்சந்தை? சற்றே உயர்வுடன் வர்த்தகம்! லாபமடையும் ஐடி பங்குகள் !

கோவையில் இருந்து புறப்பட்ட விஜய்! காரைப் பின்தொடரும் தொண்டர்கள்!

கொளத்தூரில் நடந்துசென்று மக்களை சந்தித்த முதல்வர்!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்குப் பிறகு தவெக முதல் ஈரோடு பொதுக்கூட்டத்தில் விஜய் பிரசாரம்!

SCROLL FOR NEXT