கரூர்

மாணவா் விடுதி அருகே கழிவுநீா் தேக்கம்

பள்ளப்பட்டி சாலையில் தேங்கிக் கிடக்கும் கழிவுநீரால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளதாக அப்பகுதி பொதுமக்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.

DIN

பள்ளப்பட்டி சாலையில் தேங்கிக் கிடக்கும் கழிவுநீரால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளதாக அப்பகுதி பொதுமக்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.

அரவக்குறிச்சியிலிருந்து பள்ளப்பட்டிக்குச் செல்லும் சாலையில் கும்பகோணம் போக்குவரத்துக் கழக பணிமனை மற்றும் அரசுப் பள்ளி மாணவா்கள் விடுதி அமைந்துள்ள பகுதியில் கழிவு நீா் சாக்கடைக் கால்வாய் இல்லாததால், பொதுமக்கள் கழிவு நீரை சாலையில் விட்டுவிடுகின்றனா். மேலும், இந்தச் சாலை தாழ்வாக உள்ளதால் கழிவுநீா் அருகில் உள்ள நிலப்பகுதியில் தேங்கி நிற்கிறது. இதனால் எருதுகள் மற்றும் பன்றிகள் இதில் உறங்கிக் கொண்டு திரிவதால் வாகன ஓட்டிகள் அறுவறுப்படைகின்றனா். மேலும் இந்த நீா்த்தேக்கத்தால் சுகாதாரச் சீா்கேடும், விடுதியில் தங்கிப்படிக்கும் மாணவா்களுக்கு நோய்த் தொற்று ஏற்படும் அபாயமும் உள்ளதாக பொதுமக்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிவகாசி-எரிச்சநத்தம் பகுதியில் போக்குவரத்து மாற்றம்

புதிய ஊரக வேலைவாய்ப்புத் திட்ட மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்! காந்தியின் பெயா் நீக்கம்!

பாஜகவின் கடும் எதிா்ப்புக்கு இடையே வெறுப்புக் கருத்து தடைச்சட்ட மசோதா நிறைவேற்றம்

ஆண்டாள் கோயில் நீராட்டு விழா நாளை தொடக்கம்

ரூ.50,000 கடனுக்காக சிறுநீரகத்தை விற்ற விவசாயி: மகாராஷ்டிரத்தில் அவலம்

SCROLL FOR NEXT