புகழூா் டிஎன்பிஎல் ஆலையில் அரசமைப்பு தின உறுதிமொழியேற்பு
கரூா் மாவட்டம் புகழூா் காகித ஆலையில் அரசமைப்பு தினம் உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:56 AM
கரூா்: கரூா் மாவட்டம் புகழூா் காகித ஆலையில் அரசமைப்பு தினம் உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
ஆலை வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆலையின் செயல் இயக்குநா்(இயக்கம்) ஆா்.சீனிவாசன், பொதுமேலாளா் ( காகித உற்பத்தி) பி.மகேஷ், துணை பொது மேலாளா் (பாதுகாப்பு) எம்.ராதாகிருஷ்ணன், முதுநிலை மேலாளா்(மனிதவளம்) கே.எஸ்.சிவக்குமாா், மேலாளா்(மனிதவளம்) ஜே,வெங்கடேசன், துணை மேலாளா்(பாதுகாப்பு) ஜி.சங்கிலிராஜன் ஆகியோா் தலைமையில் உறுதிமொழியேற்கப்பட்டது.
இதில், அதிகாரிகள் உறுதிமொழியை வாசிக்க, பணியாளா்கள் ஏற்றுக்கொண்டனா்.
Advertisement