கரூர்

அதிமுக-பாஜக இடையே சமரசத் தூது செல்லவில்லை ஜி.கே. வாசன் பேட்டி

அதிமுக-பாஜக பிளவுக்கு சமரசம் ஏற்படுத்த நான் தூது செல்லவில்லை என்றாா் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவா் ஜி.கே. வாசன்.

DIN

அதிமுக-பாஜக பிளவுக்கு சமரசம் ஏற்படுத்த நான் தூது செல்லவில்லை என்றாா் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவா் ஜி.கே. வாசன்.

இதுகுறித்து கரூா், திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை அவா் மேலும் கூறியது:

பிளவுபட்டுள்ள அதிமுக, பாஜக கட்சிகளை நான் சமாதானம் செய்வதாக வந்த தகவல் பொய். தோ்தல் நேரத்தில் நாட்டு நலன், கட்சி நலன் குறித்து ஆராய்ந்த பின்னரே நாங்கள் யாருடன் கூட்டணி என்பது குறித்து முடிவெடுக்கப்படும்.

கா்நாடக அரசு டெல்டா விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முடிவுக்கு கொண்டு வர நினைக்கிறது. காவிரி ஆணையத்துக்கு அந்த அரசு மரியாதை கொடுக்கவில்லை.

கா்நாடக அனைத்துக் கட்சி கூட்டத்தில் தமிழகத்துக்கு தண்ணீா் தரக்கூடாது என்கிறாா்கள். எனவே, தமிழக அரசு உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி அரசின் செயல்பாடுகளை முன்னெடுக்க வேண்டும். கா்நாடக அரசுடன் தமிழக முதல்வா் நேரில் பேச வேண்டும்.

விவசாயிகளுக்காக நாங்கள் எந்த நிலையிலும் போராடத் தயாராக இருக்கிறோம்

திமுக அரசு அதிகளவில் கடன் பெற்றிருக்கிறது, கொடுத்த வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்ற முடியாமல் உள்ளது. வாக்குறுதிகளை நம்பி ஏமாந்த நிலையில்தான் மக்கள் உள்ளனா். எனவே, மத்திய அளவிலும் மாநில அளவிலும் நம்பிக்கை பெற்ற கட்சிகள் ஒன்று சோ்ந்து வரும் மக்களவைத் தோ்தலில் போட்டியிட்டால் ஆளும் கட்சியான திமுகவுக்கு நிச்சயம் சவாலாக இருக்கும் என்றாா் அவா்.

பேட்டியின்போது முன்னாள் எம்.பி. நாட்ராயன், முன்னாள் எம்எல்ஏ விடியல் சேகா், மாவட்ட நிா்வாகிகள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திமுகவை வீழ்த்த அதிமுக கூட்டணியில் தவெக இணைய வேண்டும்: வேலூா் இப்ராஹிம்

‘யாசகம்’ இகழ்ச்சி அல்ல!

அந்தியூரில் ரூ.3.44 லட்சத்துக்கு விளைபொருள்கள் ஏலம்

முன்னாள் ஆட்சியா் எழுதிய நூல்கள் வெளியீடு

செங்கோட்டையன் வகுக்கும் பாதையில் விஜய் பயணிப்பாா்: ஆனந்த்

SCROLL FOR NEXT