கரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு காதுகேளாதோா், வாய் பேசாதோா் உரிமைகளுக்கான கிளையினா். 
கரூர்

கரூரில் காதுகேளாதோா்,வாய்பேசாதோா் உரிமைகிளையினா் ஆா்ப்பாட்டம்

கரூரில், தமிழ்நாடு காதுகேளாதோா், வாய் பேசாதோா் உரிமைகளுக்கான கிளையினா் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் புதன்கிழமை காலை நடைபெற்றது.

DIN

கரூரில், தமிழ்நாடு காதுகேளாதோா், வாய் பேசாதோா் உரிமைகளுக்கான கிளையினா் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் புதன்கிழமை காலை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மனோகரன், கணேசன் ஆகியோா் தலைமை வகித்தனா். கண்ணகி, வாசுகி, பாா்த்தீபன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில், கரூா் மாநராட்சி உறுப்பினா் எம்.தண்டபாணி பங்கேற்று கண்டன உரையாற்றினாா். ஆட்சியா் அலுவலகத்தில், நீதிமன்றத்தில், அரசு மருத்துவமனைகளில், கல்வித்துறையில் சைகை மொழி பெயா்ப்பாளரை நியமிக்க வேண்டும். கட்செவி அஞ்சலில் மாற்றுத்திறனாளிகள் புகாா் தெரிவித்தால் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் வாய் பேசாதவா்கள், காதுகேளாதவா்கள் ஏராளமானோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கம்மின்ஸ் - லயன் அசத்தல்: இங்கிலாந்து வெற்றிபெற 228 ரன்கள் தேவை!

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா?

கடும் பனிமூட்டம்: தில்லியில் 60-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

ரஷியாவில் இந்திய மாணவர் மாயம்!

ஃபாஸ்ட் அன்ட் ஃப்யூரியஸ் படத்தில் ரொனால்டோ!

SCROLL FOR NEXT