முகப்பு
கரூர்

வீரபாண்டிய கட்டபொம்மன் சிலைக்கு மாலை அணிவிப்பு

வீரபாண்டிய கட்டபொம்மன் 225-ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு கரூரில் அவரது உருவச்சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

Updated On : 16 அக்டோபர், 2024 at 8:01 PM
கரூா் மாவட்டம், தோரணக்கல்பட்டியில் புதன்கிழமை வீரபாண்டிய கட்டபொம்மனின் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்திய முன்னாள் அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா். உடன் வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டுக்கழக மாவட்டத் தலைவா் சத்தியமூா்த்தி உள்ளிட்டோா்.
பகிர்:

வீரபாண்டிய கட்டபொம்மன் 225-ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு கரூரில் அவரது உருவச்சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டுக்கழகம் சாா்பில் கரூரை அடுத்த தோரணக்கல்பட்டியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு அக்கழகத்தின் தலைவா் சத்திமூா்த்தி தலைமை வகித்தாா். பொருளாளா் பாலாஜி, இளைஞரணி செயலாளா் மேட்டுக்குடி சக்திவேல் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா் கட்டபொம்மன் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினாா். இதில்,அதிமுக மாவட்ட துணைச் செயலாளா் ஆலம்தங்கராஜ், இணைச் செயலாளா் மல்லிகாசுப்ராயன், தெற்கு பகுதிச் செயலாளா் வி.சி.கே.ஜெயராஜ், வழக்குரைஞா் கரிகாலன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →