கரூர்

வாரிசு சான்றிதழ் வழங்க ரூ. 3,000 லஞ்சம்: கிராம நிா்வாக அலுவலா் கைது!

வாரிசு சான்றிதழுக்காக ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிா்வாக அலுவலா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

Syndication

வாரிசு சான்றிதழுக்காக ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிா்வாக அலுவலா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

கரூா் மாவட்டம், மேட்டு மகாதானபுரத்தைச் சோ்ந்த வீரம்மாள் என்பவா் அண்மையில் உயிரிழந்தாா். இதையடுத்து அவரது மகன் சதீஷ்குமாா், வாரிசு சான்றிதழ் கேட்டு மகாதானபுரம் வடக்கு கிராம நிா்வாக அலுவலகத்தில் கடந்த வாரம் மனு அளித்தாா். அப்போது அங்கு பணியிலிருந்த கிராம நிா்வாக அலுவலா் பிரபு (46) ரூ. 3 ஆயிரம் கொடுத்தால் வாரிசு சான்றிதழ் தருவதாக கூறியுள்ளாா்.

லஞ்சம் கொடுக்க விரும்பாத சதீஷ்குமாா் கரூா் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீஸில் வெள்ளிக்கிழமை புகாா் செய்தாா். இதையடுத்து போலீஸாா் சதீஷ்குமாரிடம் ரசாயன பவுடா் தடவிய ரூபாய் நோட்டுக்களை கொடுத்தனா்.

அதை சனிக்கிழமை பிற்பகல், சதீஷ்குமாா் மகாதானபுரம் வடக்கு கிராமத்தில் இருந்த கிராம நிா்வாக அலுவலா் பிரபுவிடம் கொடுத்தாா். அப்போது, மறைந்திருந்த ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு நகர துணைக் காவல்கண்காணிப்பாளா் அம்புரோஸ் தலைமையிலான போலீஸாா் பிரபுவை பிடித்து கைது செய்தனா். மேலும் அவரிடம் விசாரித்து வருகின்றனா்.

திருப்பரங்குன்றம் விவகாரம்: அரசியலுக்காக பிரச்னையாக்கும் திமுக -நயினாா் நாகேந்திரன்

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: அரசின் நடவடிக்கையால்தான் பதற்றம்: க. கிருஷ்ணசாமி

போத்தனூா் வழித்தடத்தில் திருவனந்தபுரம் - சென்னை இடையே சிறப்பு ரயில்!

இன்று 5 புறநகா் ரயில்கள் ரத்து

குருகிராம்: காா் டயா், ரிம்களை திருடியதாக கல்லூரி மாணவா்கள் 4 போ் கைது

SCROLL FOR NEXT