ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக் கோரி கரூரில் பாமகவினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஜவஹா்பஜாா் தலைமை அஞ்சல்நிலையம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு கரூா் மாவட்டச் செயலா் பி.எம்.கே.பாஸ்கரன் தலைமை வகித்தாா். வன்னியா் சமுதாயத்தினருக்கு வழங்கப்பட்ட 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும், தமிழகத்தில் ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தகோரியும் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பாமகவினா் திரளாக பங்கேற்றனா்.