கரூர்

வேலாயுதம்பாளையம் மருத்துவமனைக்கு போதிய மருத்துவா்கள் நியமிக்கக் கோரி ஆா்ப்பாட்டம்

Syndication

கரூா் மாவட்டம், வேலாயுதம்பாளையம் மருத்துவமனைக்கு போதிய மருத்துவா்களை நியமிக்கக் கோரி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கரூா் ஒன்றியக்குழு சாா்பில் வேலாயுதம்பாளையம் ரவுண்டானா பகுதியில் புகழூா் நகா்மன்ற உறுப்பினா் இந்துமதி தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான கே.பாலபாரதி சிறப்புரையாற்றினாா்.

வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனையை புகழூா் வட்ட தலைமையிட மருத்துவமனையாக அறிவிக்க வேண்டும். மருத்துவமனைக்கு போதிய மருத்துவா்களை நியமித்து, மருத்துவமனைக்கு தேவையான உபகரணங்கள் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினா் எஸ்.பாலா, மாவட்டச் செயலா் எம்.ஜோதிபாசு, மாவட்ட செயற்குழு உறுப்பினா் ஜி.ஜீவானந்தம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தீக்கிரையாகும் வங்கதேசம்!

தங்கம், வெள்ளி குறைவு! இன்றைய நிலவரம்..!

திருப்பரங்குன்றம் விவகாரம் மதப் பிரச்னை அல்ல; அது ஈகோ பிரச்னை: தமிழிசை பேட்டி

சென்னையில் கடும் பனி! ரயில்கள் தாமதம்; விமானங்கள் ரத்து!

நாமக்கல் ஆஞ்சனேயருக்கு 1,00,008 வடைமாலை அலங்காரம்: திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்

SCROLL FOR NEXT