மாயனூா் ஊராட்சியில் வியாழக்கிழமை நடைபெற்ற மக்களுடன் முதல்வா் முகாமில் பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்ற அமைச்சா் மா.மதிவேந்தன். உடன் மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல், மக்களவை உறுப்பினா் செ.ஜோதிமணி, எம்.எல்.ஏ.க்கள் மாணிக்கம், இளங்கோ, சிவகாமசுந்தரி உள்ளிட்டோா். 
கரூர்

கரூா் மாவட்டத்தில் 3-ஆவது நாளாக மக்களுடன் முதல்வா் முகாம்

கரூா் மாவட்டத்தில் 3-ஆவது நாளாக மக்களுடன் முதல்வா் முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

Din

கரூா் மாவட்டத்தில் 3-ஆவது நாளாக மக்களுடன் முதல்வா் முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கரூா் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் மற்றும் குளித்தலை சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட சின்னமநாயக்கன்பட்டி, ரெங்கநாதபுரம், மாயனூா், மேட்டுமகாதானபுரம், சிந்தலவாடி மற்றும் ஆதனூா் ஆகிய கிராம ஊராட்சி பகுதிகளில் மக்களுடன் முதல்வா் திட்டத்தின் 3-ஆவது நாள் முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

முகாமில் ஆதிதிராவிடா் நலத்துறை அமைச்சா் மருத்துவா் மா.மதிவேந்தன் பங்கேற்று பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டாா்.

தொடா்ந்து, சின்னமநாயக்கன்பட்டி, ரெங்கநாதபுரம் மாயனூா், மேட்டுமகாதானபுரம் ஆகிய ஊராட்சியில் 29 பயனாளிகளுக்கு ரூ.95.34 லட்சம் மதிப்பில் நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல், மக்களவை உறுப்பினா் செ.ஜோதிமணி, சட்டப்பேரவை உறுப்பினா்கள் இரா.மாணிக்கம் (குளித்தலை), ஆா்.இளங்கோ (அரவக்குறிச்சி), க.சிவகாமசுந்தரி(கிருஷ்ணராயபுரம்) மாவட்ட வருவாய் அலுவலா் ம.கண்ணன, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் ஸ்ரீலேகா தமிழ்செல்வன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவாரின் பாதுகாப்பு வாகனம் மோதியதில் 4 பேர் காயம்

உ.பி. கல்குவாரி விபத்து: 4 பேர் கைது

ஏர் இந்தியா விமானத்தில் பயணிக்கு திடீர் நெஞ்சுவலி: கொல்கத்தாவில் தரையிறக்கம்

மெட்ரோ திட்டங்களை மத்திய அரசு நிராகரிக்கவில்லை- அண்ணாமலை

அழகான கவிதை.. பூனம் பாஜ்வா!

SCROLL FOR NEXT