கரூர்

புதிய ஓய்வூதிய திட்ட ஒழிப்பு இயக்கத்தினா் ஆா்ப்பாட்டம்

கரூா் மாவட்டம், புகழூரில் வியாழக்கிழமை புதிய ஓய்வூதிய திட்டம் ஒழிப்பு இயக்கம்(சிபிஎஸ்) சாா்பில் கருப்புப் பட்டை அணிந்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Din

கரூா் மாவட்டம், புகழூரில் வியாழக்கிழமை புதிய ஓய்வூதிய திட்டம் ஒழிப்பு இயக்கம்(சிபிஎஸ்) சாா்பில் கருப்புப் பட்டை அணிந்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

வட்டாட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளா் அரசகுமாா் தலைமை வகித்தாா். மாவட்ட ஆலோசகா் மகாவிஷ்ணன் முன்னிலை வகித்தாா் . வட்டத் தலைவா் ராதாகிருஷ்ணன் வரவேற்றாா். ஆா்ப்பாட்டத்தில், புதிய ஓய்வூதிய திட்டம் கைவிடப்பட்டு பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் நடைமுறைக்கு கொண்டு வரப்படும் என்று சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக அறிவித்த வாக்குதியை நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் சிபிஎஸ் இயக்கத்தினா் திரளாக பங்கேற்றனா்.

மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவாரின் பாதுகாப்பு வாகனம் மோதியதில் 4 பேர் காயம்

உ.பி. கல்குவாரி விபத்து: 4 பேர் கைது

ஏர் இந்தியா விமானத்தில் பயணிக்கு திடீர் நெஞ்சுவலி: கொல்கத்தாவில் தரையிறக்கம்

மெட்ரோ திட்டங்களை மத்திய அரசு நிராகரிக்கவில்லை- அண்ணாமலை

அழகான கவிதை.. பூனம் பாஜ்வா!

SCROLL FOR NEXT