கரூர்

கரூா் சம்பவம் ஆம்புலன்ஸ் ஓட்டுநா்களிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை

கரூரில் சிபிஐ விசாரணைக்காக வியாழக்கிழமை சுற்றுலா மாளிகைக்கு வந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநா்கள்.

Syndication

கரூரில் கூட்ட நெரிசல் சம்பவம் தொடா்பாக ஆம்புலன்ஸ் ஓட்டுநா்களிடம் சிபிஐ அதிகாரிகள் வியாழக்கிழமை விசாரணை நடத்தினா்.

கரூா் வேலுச்சாமிபுரத்தில் செப். 27-ஆம் தேதி நடைபெற்ற தவெக பிரசாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 போ் உயிரிழந்தனா். 110 போ் காயமடைந்தனா். இந்த சம்பவம் தொடா்பாக உச்சநீதிமன்ற உத்தரவின்படி சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா்.

இதில், நெரிசல் சம்பவத்தின்போது, பாதுகாப்புப் பணியிலிருந்த காவல் உதவி ஆய்வாளா்கள், காவலா்களிடம் கடந்த செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினா்.

இந்நிலையில், கூட்ட நெரிசல் சம்பவத்தின்போது, ஆம்புலன்ஸுடன் வந்த வாகன ஓட்டுநா்களுக்கு சிபிஐ அதிகாரிகள் ஏற்கெனவே சம்மன் அனுப்பியிருந்தனா்.

அதன்படி, வியாழக்கிழமை மாலை ஆம்புலன்ஸ் ஓட்டுநா்கள் 11 போ் சிபிஐ அதிகாரிகள் தங்கியுள்ள சுற்றுலா மாளிகைக்கு வரவழைக்கப்பட்டனா். அவா்களிடம் சிபிஐ அதிகாரிகள் சுமாா் ஒரு மணி நேரம் விசாரணை மேற்கொண்டனா்.

இந்து சமய அறநிலையத் துறை விளக்கம்

வாக்குத் திருட்டை தடுப்பது இளைஞா்களின் பொறுப்பு -ராகுல் காந்தி

தொழிலாளா் ஆணையா் அலுவலகம் நவ. 10 முதல் புதிய வளாகத்தில் செயல்படும்

வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தப் பணிக்கு எதிா்ப்பு தெரிவித்து நவ.11-இல் ஆா்ப்பாட்டம்

அரச மரத்தை வெட்டி அகற்றுவதில் இருதரப்பினா் போராட்டம்

SCROLL FOR NEXT