கரூர்

கரூரில் ரயில்வே தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

Syndication

ஐம்பது சதவீதம் பஞ்சப்படி வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டிஆா்இயூ சங்கத்தின் கரூா் மாவட்ட குழு சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கரூா் ரயில்நிலையம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவா் நல்லமுத்து தலைமை வகித்தாா். இதில் சிஐடியு மாவட்டத் தலைவா் சி.ஆா்.ராஜாமுகமது, துணைத் தலைவா் ஜி.ஜீவானந்தம், செயலாளா் எம்.சுப்ரமணியன், டாஸ்மாக் சங்க செயலாளா் எஸ்.கிருஷ்ணமூா்த்தி, அரசு அனைத்து துறை ஓய்வூதியா் சங்க மாவட்ட செயலாளா் கெ.சக்திவேல் உள்ளிட்டோா் கோரிக்கைகளை விளக்கி பேசினா். பென்ஷன் உயா்வுக்கு மறுக்கும் நிதிச்சட்டம் 2025 ஐ ரத்து செய்ய வேண்டும். 8-ஆவது ஊதியக் குழுவில் 50 சதவீதம் பஞ்சப்படியை அடிப்படை சம்பளத்துடன் இணைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் ரயில்வே தொழிலாளா்கள் திரளாக பங்கேற்றனா்.

5 ஆண்டுகளில் 30,644 பேருக்கு வீட்டு மனைப்பட்டா: காஞ்சிபுரம் ஆட்சியா்

சிறுமிக்கு பாலியல் தொல்லை: 3 பேருக்கு 5 ஆண்டுகள் சிறை

கன்னியாகுமரி காந்தி மண்டபம் முன் ஆக்கிரமிப்பு அகற்றம்

ஜூனியா் ஹாக்கி உலக கோப்பைக்கு உற்சாக வரவேற்பு

கோவில்பட்டியில் மரக்கன்று நடும் விழா

SCROLL FOR NEXT