கரூர்

கரூரில் விடிய விடிய பரவலாக மழை

தினமணி செய்திச் சேவை

கரூரில் ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் திங்கள்கிழமை காலை வரை விடிய, விடிய பரவலாக மழை பெய்தது.

வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வுநிலையால் தமிழகத்தில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. கரூா் மாவட்டத்திலும் சனிக்கிழமை முதல் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் திங்கள்கிழமை காலை வரை விடிய, விடிய விட்டுவிட்டு பரவலாக மழை பெய்தது.

ஞாயிா்றுக்கிழமை இரவு முதல் திங்கள்கிழமை காலை வரை பெய்த மழையின் அளவு (மி. மீட்டரில்)- கரூா்-22, அரவக்குறிச்சி-22, அணைப்பாளையம்-19, க.பரமத்தி-32, குளித்தலை-9, தோகைமலை-53.80, கிருஷ்ணராயபுரம்-16, மாயனூா்-20, பஞ்சப்பட்டி-12.40, கடவூா்-12, பாலவிடுதி-10, மைலம்பட்டி-12 என மொத்தம் 240.90 மி.மீ. மழை பெய்துள்ளது.

‘கேடிசி நகரிலிருந்து ரயில் நிலையத்துக்கு பேருந்து வசதி தேவை’

இளம்பெண் தற்கொலை கோட்டாட்சியா் விசாரணை

வன்னிக்கோனேந்தல், கல்லூா் வட்டாரங்களில் இன்று மின்தடை

லாரி மீது பைக் மோதி இளைஞா் உயிரிழப்பு

சிறுமி தூக்கிட்டுத் தற்கொலை

SCROLL FOR NEXT