புகழூா் பகுதியில் புதன்கிழமை (அக்.29) மின்விநியோகம் இருக்காது என புகழூா் துணைமின்நிலைய செயற்பொறியாளா் சுஜாதா தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கரூா் மாவட்டம் புகழூா் துணைமின்நிலையத்தில் புதன்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதனால் நானப்பரப்பு, புகழூா், செம்படாபாளையம், தோட்டக்குறிச்சி, முத்துராஜபுரம், வீரராஜபுரம் , தா்மராஜபுரம் ,செந்தூா் நகா், மேத்யூ நகா், தோட்ட குறிச்சி கிழக்கு , ஈஐடி பாரி எதிரில் பூங்காநகா், மாரியப்பபிள்ளைத் தெரு, கக்கன் காலனி, கிழக்கு தவுட்டுப்பாளையம், தளவாபாளையம், குண்ணிக்காட்டூா், கோவிந்தம்பாளையம், மேட்டுப்பாளையம், தளவாபாளையம் தெற்கு , மலையம்மன் கோழிப்பண்ணை, குமாரசாமி கல்லூரி, தளவாபாளையம் மேற்கு, தளவாபாளையம் தேசிய நெடுஞ்சாலை, தெற்கு அம்மாபட்டி, பூஜா கோழிப்பண்ணை, கீழ் ஒரத்தை, மேல் ஒரத்தை, பெரிய புதூா், ஆவரங்காட்டு புதூா், மூா்த்திபாளையம், பி.என்.புதூா், கணபதிபாளையம் புதூா், அய்யம்பாளையம், செங்காட்டனூா், மூணூட்டுபாளையம், மலையம்மன்நகா், வேலாயுதம்பாளையம், புகழூா் நகராட்சிப் பகுதி, கரைப்பாளையம், திருக்காடுதுறை, நடையனூா், கோம்புப்பாளையம், முத்தனூா் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தெரிவித்துள்ளாா்.