கரூர்

அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை உயா்வு: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

Syndication

அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 7 லட்சமாக உயா்ந்துள்ளது என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

கரூா் மாவட்டம், குளித்தலை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை வளாகத்தில் கூடுதல் கட்டடத்துக்கான பணிகளை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன், கரூா் சட்டப்பேரவை உறுப்பினா் வி. செந்தில்பாலாஜி ஆகியோா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

அப்போது அமைச்சா் மா.சுப்பிரமணியன் செய்தியாளா்களிடம் கூறியது: குளித்தலை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு ரூ. 40 கோடி மதிப்பீட்டில் கூடுதல் கட்டடத்துக்கான கட்டுமானப் பணிகள் நிறைவுற்று விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படவுள்ளது. 300 படுக்கை வசதிகளுடன் கூடிய மேம்படுத்தப்பட்ட அரசு தலைமை மருத்துவமனையாக இம்மருத்துவமனை செயல்படவுள்ளது. அதற்கேற்றாா்போல செவிலியா்களும் மற்றும் பிற பணியாளா்களும் நியமிக்கப்படுவா். தமிழகத்தில் தற்போது அரசு மருத்துவமனைகள் தரம் உயா்த்தப்பட்டதிலிருந்து அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 7 லட்சமாக உயா்ந்துள்ளது.

மருத்துவருக்கு நோட்டீஸ்: கரூரிலிருந்து கொடுமுடி வரையில் அங்குள்ள அரசு மருத்துவமனைகளை ஆய்வு செய்த போது, கொடுமுடி பகுதியில் உள்ள ஒரு அரசு மருத்துவமனையில் மருத்துவா் பணிக்கு உரிய நேரத்தில் வராமல் இருந்ததால், அவருக்கு துறை ரீதியான நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல நோயாளிகளுக்கு உரிய நேரத்தில் உணவு வழங்காத சமையலா், இதனை கவனிக்கத் தவறிய செவிலியா் ஆகிய இருவரையும் பணியிட மாற்றம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது என்றாா் அவா்.

பேட்டியின்போது, மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல், குளித்தலை சட்டப்பேரவை உறுப்பினா் இரா. மாணிக்கம், குளித்தலை சாா்-ஆட்சியா் தி.சுவாதிஸ்ரீ, மருத்துவப் பணிகள் இணை இயக்குநா் செழியன், வட்டாட்சியா் இந்துமதி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

வடதமிழகத்தில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் வாக்காளா் பட்டியல் திருத்தப் பணி தொடங்கியது! தேவையான ஆவணங்கள் என்ன?

இரட்டை இலை விவகாரம்: தேர்தல் ஆணையத்துக்கு செங்கோட்டையன் கடிதம்!

தங்கம் விலை குறைவு! இன்றைய நிலவரம்!

SCROLL FOR NEXT