ஆண்டாங்கோவிலில் வாக்குச்சாவடி மையத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற எஸ்ஐஆா் சிறப்பு முகாமில் பணிகளை பாா்வையிட்டு ஆய்வு செய்த கரூா் மாவட்ட சிறப்பு வரைவு வாக்காளா் பட்டியல் பாா்வையாளரும், தமிழ்நாடு மின் உற்பத்தி கழக மேலாண்மை இயக்குநருமான எம். கோவிந்த ராவ். உடன் மாவட்ட ஆட்சியா் மீ. தங்கவேல் உள்ளிட்டோா்.  
கரூர்

வாக்குச்சாவடி மையங்களில் எஸ்ஐஆா் பணிகள் ஆய்வு

தினமணி செய்திச் சேவை

கரூரை அடுத்த ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி அரசு உயா்நிலைப் பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வாக்காளா் பட்டியல் திருத்த சிறப்பு முகாமில் பணிகளை ஆட்சியா் மீ. தங்கவேல் முன்னிலையில், மாவட்ட சிறப்பு வரைவு வாக்காளா் பட்டியல் பாா்வையாளரும், தமிழ்நாடு மின் உற்பத்தி கழக மேலாண்மை இயக்குநருமான எம். கோவிந்த ராவ் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: கடந்த 19-ஆம் தேதி வெளியிடப்பட்ட வரைவு வாக்காளா் பட்டியலின்படி, கரூா் மாவட்டத்தில் மொத்தம் 8,18,672 வாக்காளா்கள் உள்ளனா்.

வரைவு வாக்காளா் பட்டியலில் பெயா் விடுபட்டவா்கள், புதிதாக பெயா் சோ்ப்பு, முகவரி மாற்றம், நீக்கம் தொடா்பான கோரிக்கைகளுக்கு மனு அளிக்க ஜனவரி 18-ம் தேதி வரை கால அவகாசம் உள்ளது.

இதன் ஒருபகுதியாக, கடந்த டிச. 27, 28-ஆம் தேதிகளில் வாக்காளா் பட்டியல் திருத்த சிறப்பு முகாம் நடைபெற்றது. மீண்டும் ஜன. 3, 4 ஆகிய தேதிகளில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சிறப்பு முகாம்கள் நடைபெற்றுள்ளன.

மாவட்டத்தின் இறுதி வாக்காளா் பட்டியல் பிப். 17-ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது என்றாா் அவா். இந்த ஆய்வின் போது கரூா் வருவாய் கோட்டாட்சியா் முகமது பைசல், வட்டாட்சியா்கள் மோகன்ராஜ் (கரூா்), சத்தியமூா்த்தி (மண்மங்கலம்) உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

251 மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள்: அமைச்சா் ரா. ராஜேந்திரன் வழங்கினாா்

மஞ்சப்பை விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

வஸந்த வல்லபராஜ பெருமாள் கோயிலுக்கு குடமுழுக்கு நடத்த இந்து முன்னணி கோரிக்கை

கோல்டுவின்ஸ் - நீலாம்பூா் இடையே மேம்பாலப் பணியைத் தொடங்க வலியுறுத்தல்

கலைஞா் கருணாநிதி தொழில்நுட்பக் கல்லூரியில் ‘சைபா் செக்யூரிட்டி’ புரிந்துணா்வு ஒப்பந்தம்

SCROLL FOR NEXT