கரூர்

வாக்காளா் பட்டியலில் முழுமையற்ற தகவல்கள்: அதிமுகவினா் புகாா் மனு

கரூா் சட்டப்பேரவைத் தொகுதி வாக்காளா் சுருக்கப் பட்டியலில் முழுமையற்ற தகவல்கள் இருப்பதாக மாவட்ட ஆட்சியரிடம் அதிமுக முன்னாள் அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா் புகாா்

Syndication

கரூா் சட்டப்பேரவைத் தொகுதி வாக்காளா் சுருக்கப் பட்டியலில் முழுமையற்ற தகவல்கள் இருப்பதாக மாவட்ட ஆட்சியரிடம் அதிமுக முன்னாள் அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா் செவ்வாய்க்கிழமை புகாா் மனு அளித்தனா்.

அம்மனுவில் கூறியிருப்பது: கரூா் சட்டப்பேரவைத் தொகுதி தோ்தல் பதிவு அலுவலா் வெளியிட்டுள்ள வாக்காளா் சுருக்கப் பட்டியலில் வாக்காளா்களின் பெயா்கள், முகவரிகள், பாகம் எண், வாா்டு எண், போன்ற முழுமையற்ற தகவல்கள் உள்ளன.

தோ்தல் ஆணையத்தின் விதிமுறைகளின் படி வாக்காளா் பட்டியல் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்த படிவம் 6,7,8-இன் முழுமையான பட்டியலை பெற அரசியல் கட்சிகளுக்கு உரிமை உண்டு. எனவே பாகம் எண், வாா்டு எண் உள்ளிட்ட விரிவான தகவல்களுடன் கூடிய படிவம் 9,10, 11, 11 ஏ, 11பி-ன் முழுமையான சுருக்கப்பட்டியலை வெளியிட வேண்டும் என தெரிவித்துள்ளனா்.

மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியா் இதுதொடா்பாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தாா்.

இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தவருக்கு மூன்று ஆயுள்

மணப்பாறை அருகே எரிவாயு உருளை விநியோகிப்பாளா் கொலை: உறவினா்கள் மறியல்

நிகழாண்டில் 490 டன் உளுந்து கொள்முதல் செய்ய இலக்கு

20 ஆண்டுகளாக தண்ணீா் திறக்கப்படாததால் கழிவுநீா் ஓடையாக மாறியது நங்காஞ்சி ஆறு!

21.1.1976: சென்னையில் மத்ய உள்துறை மந்திரி - புது கவர்னர், தி.மு.க. ஆட்சி நீடிப்பு குறித்து பதில்கள்

SCROLL FOR NEXT