பெரம்பலூர்

மசாலா பவுடர் தயாரிக்க ஆக. 22-இல் இலவச பயிற்சி

DIN

பெரம்பலூர் மாவட்டம் வாலிகண்டபுரத்திலுள்ள ஹேன்ஸ் ரோவர் வேளாண் அறிவியல் மையத்தில் ஆக. 22 ஆம் தேதி மசாலா பவுடர் தயாரிப்பு குறித்த இலவச பயிற்சியில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அந்த மையத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் (பொ) ஜெ. கதிரவன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் மேலும் தெரிவித்துள்ளதாவது: ஆக. 22ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறும் இப்பயிற்சியில், 12 விதமான மசாலா பொடி தயாரிப்பு குறித்த தொழில்நுட்ப பயிற்சி விளக்க உரையாகவும், செயல்முறை பயிற்சியாகவும் அளிக்கப்பட உள்ளது. மேலும், சந்தைப்படுத்துதல் மற்றும் தொழில் உரிமம் பெறுவது தொடர்பான தகவல்களும் வழங்கப்பட உள்ளது.
விருப்பமுள்ளவர்கள் நேரடியாகவோ அல்லது மனையியல் தொழில்நுட்ப வல்லுநரை 7299712149 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தங்களது பெயரை முன்பதிவு செய்துகொள்ளலாம். குறிப்பிட்ட எண்ணிக்கையிலான நபர்களே பயிற்சியில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள். எனவே, ஆர்வமுள்ளவர்கள் விரைவாக தங்களது பெயரை பதிவு செய்து பயன்பெறலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாழ்கிறபோது எதையும் சிறப்பாக செய்பவா்களே மாமனிதா்கள்: குன்றக்குடி பொன்னம்பல அடிகளாா்

கீழையப்பட்டியில் மஞ்சுவிரட்டு

போடி அருகே இளைஞா் தற்கொலை

ரயில் நிலையத்தில் வசித்த முதியோா்கள் மூவா் மீட்பு

பள்ளிகள் வாரியாக தோ்ச்சி விகிதம்

SCROLL FOR NEXT