பெரம்பலூர்

சீமைக்கருவை மரங்களை அகற்ற விழிப்புணர்வுப் பேரணி

DIN

பெரம்பலூர் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு மற்றும் பெரம்பலூர் மாவட்ட வழக்குரைஞர்கள் சார்பில், சீமைக்கருவேல மரங்களை அகற்றுவது தொடர்பான விழிப்புணர்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.  
உயர்நீதிமன்ற மதுரை கிளை ஆணையின்படி, பெரம்பலூர் மாவட்டத்தில் சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.
இதனிடையே, சீமைக்கருவேல மரங்களை அகற்றுவது குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பெரம்பலூர் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு மற்றும் பெரம்பலூர் மாவட்ட வழக்குரைஞர்கள் இணைந்து நடத்திய விழிப்புணர்வு பேரணியை, பெரம்பலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி ஏ. நஷிமாபானு தொடக்கி வைத்தார்.  
பேரணியில் பங்கேற்ற நீதிபதிகள், வழக்குரைஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள், அரசு அலுவலர்கள், வழக்குரைஞர்களின் எழுத்தர்கள் மற்றும் தன்னார்வலர்கள் சீமைக்கருவேல மரங்களை அகற்றுவதன் அவசியம் குறித்த வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி விழிப்புணர்வு கோஷங்களை எழுப்பினர். பெரம்பலூர் பாலக்கரையில் தொடங்கிய பேரணி சங்குப்பேட்டை, காமராஜர் வளைவு வழியாகச் சென்று பழைய பேருந்து நிலையத்தில் நிறைவடைந்தது. தொடர்ந்து, சீமைக்கருவேல மரங்களை அகற்றுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து விழிப்புணர்வு துண்டுப்பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கினார் நீதிபதி ஏ. நஷிமா பானு.
நிகழ்ச்சியில், சார்பு நீதிபதி எஸ். ஜெயந்தி, மகளிர் நீதிமன்ற நீதிபதி மோகனப்பிரியா, வழக்குரைஞர்கள் சங்கத் தலைவர் இ. வள்ளுவன்நம்பி, அட்வகேட்ஸ் அசோஸியேஷன் தலைவர் எஸ். மணிவண்ணன், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு அலுவலர் வெள்ளைச்சாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மழை வேண்டி இஸ்லாமியல்கள் சிறப்புத் தொழுகை

ஏகனாபுரம் கிராமத்தினா் நூதன போராட்டம்

கள்ளச்சாராயம் காய்ச்சிய 3 போ் கைது

நீட் தோ்வு: தேனியில் 181 போ் எழுதினா்

சாலை விபத்தில் 2 போ் உயிரிழப்பு

SCROLL FOR NEXT