பெரம்பலூர்

மனுநீதி முகாமில் 122 பேருக்கு உதவி

DIN

பெரம்பலூர் அருகேயுள்ள அருமடல் கிராமத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற சிறப்பு மனுநீதி நிறைவு நாள் முகாமில், 122 பயனாளிகளுக்கு ரூ. 61.68 லட்சத்திலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
முகாமுக்குத் தலைமை வகித்த மாவட்ட வருவாய் அலுவலர் பா. பாஸ்கர் பேசியது:
தமிழக அரசு பொதுமக்களின் குறைகளை நிவர்த்தி செய்திடும் வகையில் இதுபோன்ற மக்கள் தொடர்பு முகாம்களை நடத்தி, மக்களின் கோரிக்கைகள் விரைவாக தீர்க்கப்படு கின்றன. பொதுமக்கள் அனைவரும் இதுபோன்ற முகாம்களில் தெரிவிக்கப்படும் மக்கள் நலத்திட்டங்களை தெரிந்துகொள்ள வேண்டும். சம்பந்தப்பட்ட அலுவலர்களை அணுகி அத்திட்டங்களை பயன்படுத்திக் கொண்டு தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்ளலாம். முகாமில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட 20 மனுக்களில் 11 மனுக்கள் ஏற்கப்பட்டன. 9 மனுக்களுக்கு உரிய விசாரணை மேற்கொள்ளப்படுகிறது என்றார் அவர்.
தொடர்ந்து, பெரம்பலூர் தொகுதி எம்எல்ஏ இரா. தமிழ்ச்செல்வன் பேசியது: தமிழக மக்களின் வாழ்க்கை முன்னேற்றத்தில் மிகுந்த அக்கறைகொண்ட தமிழக அரசு, பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக, வறட்சி நிலவும் இக்காலத்தில் மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், புதிய ஆழ்குழாய் கிணறுகள் அமைத்தல், கிணறுகள் அமைத்தல் மற்றும் பழைய கிணறுகளை சீரமைத்தல் உள்ளிட்ட திட்டப் பணிகளைச் செயல்படுத்தி வருகிறது. எனவே, பொதுமக்கள் நலத்திட்டங்களால் தங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார் அவர்.
முகாமில், பல்வேறு அரசுத் துறைகள் சார்பில் 122 பயனாளிகளுக்கு ரூ. 61.68 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் புஷ்பவதி, வட்டாட்சியர்கள் பாலகிருஷ்ணன், சிவகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாழ்கிறபோது எதையும் சிறப்பாக செய்பவா்களே மாமனிதா்கள்: குன்றக்குடி பொன்னம்பல அடிகளாா்

கீழையப்பட்டியில் மஞ்சுவிரட்டு

போடி அருகே இளைஞா் தற்கொலை

ரயில் நிலையத்தில் வசித்த முதியோா்கள் மூவா் மீட்பு

பள்ளிகள் வாரியாக தோ்ச்சி விகிதம்

SCROLL FOR NEXT